என் விழியில் விழுந்து
என் நெஞ்சில் கலந்து
என் மூளையில் சுழன்று
என் எண்ணத்தில் அமர்ந்து
என் மனதில் நிரந்தர இடம் பிடித்தவளே!
உன் மனதில் எனக்கோரு இடம் கிடைக்குமா?
உன் ஒர பார்வை என் மீது பட்டால் போதும் பெண்ணே
அன்றே என் உயிர் பிரிந்தாலும் வருந்த மாட்டேன் பெண்ணே
உன் முகம் என்னை பார்த்து சிரித்தால் போதும் பெண்ணே
அன்றே என் கண்கள் போனாலும் கலங்க மாட்டேன் பெண்ணே
உன் ஒரு வார்த்தை என் காதில் விழுந்தால் போதும் பெண்ணே
அன்றே என் காது செயலிழந்தாலும் அழ மாட்டேன் பெண்ணே
என்னை பிடிக்கவில்லை என்று நீ சொன்னால் போதும் பெண்ணே
அன்றே என் உயிரை உனக்கு காணிக்கை செய்வேன் பெண்ணே
உன் மனதில் எனக்கொரு இடம் தந்தால் போதும் பெண்ணே
அன்றே உனக்கு அடிமை சாசனம் எழுதி தருவேன் பெண்ணே
புதன், 6 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக