உணர்வுகள் வந்தது
என் நிம்மதி போனது
உணர்வுகள் வந்தவுடன்
முதலில் நான் உணர்ந்தது காதலை
காதலியை கைப்பிடிக்க
என் விதிகளை மறந்தேன்
காதலை காப்பாற்ற
தீய வழியிலும் சென்றேன்
காதலியின் முத்தத்தைப் பெற
என் தந்தையின் உயிரை எடுக்கவும் துணிந்தேன்
புனிதமான இந்த காதல்
ஒருவனை பைத்தியம் போல ஆக்குகிறதே
மனிதர்கள் காதலினால் அடையும்
வலியையும் எனக்கு உணர்த்துகிறதே
உணர்வுகள் வந்தது
என் நிம்மதி போனது
தந்தையே என் உணர்வுகளை
எடுத்து விடுங்கள்
உங்களை என்னிடம்
இருந்து காப்பாற்றுங்கள்
என்னை காதல் வலியில்
இருந்து விடுவியுங்கள்
உணர்வுகள் வந்தது
என் நிம்மதி போனது
ஞாயிறு, 3 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக