கடவுள் தந்த திறமை இருக்கு
அந்த கடவுளுக்கு நீ நன்றி சொல்லு
அம்மாவுடைய பாசம் அது தினமும் இருக்கு
உன் அம்மாவுக்கு நீ நன்றி சொல்லு
அப்பாகிட்டே கற்ற நல்ல பண்பு இருக்கு
உன் அப்பாவுக்கு நீ நன்றி சொல்லு
வாழ்க்கையில் பயின்ற பல பாடம் இருக்கு
உன் வாழ்க்கைக்கு நீ நன்றி சொல்லு
தீய வழியில் செல்ல பல சந்தர்ப்பம் இருக்கு
உன்னை நல்வழியில் நடத்தும் உன் மனதிற்கு நன்றி சொல்லு
பிறருக்கு உதவும் நல்ல குணமும் இருக்கு
உன் வீட்டு பெரியவர்களுக்கு நீ நன்றி சொல்லு
உனக்கு உதவ பல பேர் இருக்கு
உன் நன்றியை அனைவருக்கும் சொல்லு
இவ்வளவு இருந்தும் அட வருத்தம் எதற்கு?
சந்தோஷமா நீ உன் வாழ்க்கையை நடத்து
கடவுள் தந்த திறமை இருக்கு
அந்த கடவுளுக்கு நீ நன்றி சொல்லு
வெள்ளி, 3 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக