உன்னை பற்றி நினைச்சா
பாட்டு தானா வருது
உன் பெயரை சொன்னா
மகிழ்ச்சி தானா வருது
உன் அருகில் வந்தா
வெட்கம் தானா வருது
நீ நடந்து வந்த பாதையில்
மலர் செடிகள் பல வளருது
மலர் மிதித்த மண்ணில்
மலர்கள் நல்ல வாசம் தருது
உன் மழலைச் சிரிப்பைப் பார்க்கும் போது
மகிழ்ச்சியில் உயிரே போகுது
நீ என்னை கோபமாய் திட்டும் போது
பிரிந்த உயிர் மறுபடியும் வருது
உன்னால் ஒரே நாளில்
பல ஜனனம் மரணம் நிகழுது
நான் இந்த உலகில்
பிறந்த காரணமும் தெரியுது
உன்னை பற்றி நினைச்சா
பாட்டு தானா வருது
உன் பெயரை சொன்னா
மகிழ்ச்சி தானா வருது
உன் அருகில் வந்தா
வெட்கம் தானா வருது
வெள்ளி, 3 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக