அன்னையின் கஷ்டம்
குழந்தையின் ஜனனமாகும்
புயலின் கொடுமை
தாகத்தை தீர்க்கும் தீர்த்தமாகும்
குதிரையின் வலி
கால் பலமாகும்
உழைப்பவனின் களைப்பு
ஆழ்ந்த தூக்கமாகும்
இரும்பின் துயரம்
அருவாளாய் மாறும்
தோல்வியின் பாடம்
வெற்றியாய் மாறும்
அன்னையின் கஷ்டம்
குழந்தையின் ஜனனமாகும்
நேர்மையின் வீழ்ச்சி
நிச்சயம் நீடிக்காது
போலியான பாசம்
என்றும் உண்மையாகாது
பொய்யான காதல்
காலத்திற்கு நீடிக்காது
புரியாத வாழ்க்கை
என்றும் பலன் அழிக்காது
வீண் ஆடம்பரம்
நற்பெயரை கொடுக்காது
செய்யும் துரோகம்
அழிக்காமல் விடாது
தெய்வத்தின் கோபம்
தண்டிக்காமல் விடாது
வெள்ளி, 24 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக