உழைத்தது போதும் ஒய்வேடு என்று
ஒரு குரல் கேட்கிறது
வேலையை முடித்து விட்டு நிம்மதியாய் ஒய்வேடு என்று
மறு குரல் கேட்கிறது
எந்த குரலை நான் கேட்க
குழம்புது என் மனம்
ஒய்வேடுக்க துடிக்குது உடல்
அதனால் முதல் குரலை கேட்கவா
இன்னும் சிறிது வேலை தான் என்கிறது மனம்
அதனால் இரண்டாவது குரலை கேட்கவா
குழம்பினேன் மனம் வருந்தினேன்
தூக்கம் ஒரு புறம் அழைக்க
லட்சியம் மறு புறம் அழைக்க
லட்சியதை ஒதுக்கி வைத்து தூங்க மனமில்லை
தூக்கத்தை ஒதுக்கி வைத்து லட்சியத்தை காக்க உடல் ஒத்துழைப்பு தரவில்லை
உடல் ஒய்வை தானே நாடும்
என்று மனம் நம்பினால் உறக்கம் தானே வரும்
மனதை இழுத்தேன்
என் வசம் இழுத்தேன்
இரண்டாவது குரலை
முற்றிலுமாய் அழித்தேன்
உழைத்தேன் உறங்காமல் உழைத்தேன்
லட்சியத்தை காத்தேன்
லட்சியத்தை காத்த மகிழ்ச்சியில்
முழு மனதுடன் நிம்மதியாய் தூங்கினேன்
எப்போதும் ஒரு குரல்
நம் நலனுக்கு எதிராகவே இருக்கும்
அந்த குரலை அறிந்து
அழித்தால் தான் உனக்கு நலமாக இருக்கும்
உழைத்து விட்டு நிம்மதியாய் ஒய்வேடு என்று
ஒரே குரல் தான் கேட்கிறது
சனி, 11 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக