Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

குறுகிய வட்டத்தை உடைத்து எறி!!

நடை போடு, நடை போடு
பெரும் சாதனையை நோக்கி நடை போடு

தடை போடு, தடை போடு
உன் தயக்கத்திற்கு நீ தடை போடு

துணிவோடு நீ காட்டி விடு
இந்தியனின் திறமையை உலகத்திற்கு நீ காட்டி விடு

மாதம் மாதம் சம்பளம் வாங்கினால் போதுமா
இது தான் சுகமான வாழ்க்கை என்று நினைத்தால் நியாயமா?

உன்னோட வட்டத்தை உடைத்து எறிந்து விடு
வெளிநாட்டு கம்பெனிக்கு உழைத்தது போதும், விட்டு விடு

தலைவனாகிற திறமை உன் கிட்டே இருக்கு
பல ஆயிரம் பேருக்கு சம்பளம் கொடுக்கிற திறமையும் உன் கிட்டே இருக்கு
நம்பிக்கையுடன் நீ நடை போடு வெற்றி அருகில் தான் இருக்கு

சம்பாதித்த பணத்தை முதலாய் போட்டு விடு
கூடவே உன் திறமையாய் முதலாய் போட்டு விடு
லாபம் நிச்சயம் வந்து விடும், உன் முதல் பல மடங்காய் பெருகி விடும்

நடை போடு, நடை போடு
பெரும் சாதனையை நோக்கி நடை போடு

தடை போடு, தடை போடு
உன் தயக்கத்திற்கு நீ தடை போடு

துணிவோடு நீ காட்டி விடு
இந்தியனின் திறமையை உலகத்திற்கு நீ காட்டி விடு

இந்தியன் என்றால் உழைத்து கொண்டே இருக்கணுமா?
முதலாளி ஆகனும் என்ற எண்ணம் வர வேண்டாமா?

நம் உழைப்பை முதலாய் வைத்து
பல வெளிநாட்டு கம்பெனிகள் இருக்கு

நம் உழைப்பை முதலாய் வைத்து
நமக்கு ஒரு கம்பெனி இருக்க வேண்டாமா?

உன் குறுகிய வட்டத்தை உடைக்க வேண்டாமா?
உன் கனவு லட்சியத்தை பெருக்க வேண்டாமா?

நம்மை நம்பி தான் இந்தியாவே இருக்கு
அதன் எதிர்காலம் நம்ம கையில் தான் இருக்கு

நம் நாடு நமக்கு நிறைய கொடுத்தது
அதனை மறப்பது நியாயமா
அதற்கு திருப்பி கொடுக்காமல் விடலாமா?

நடை போடு, நடை போடு
பெரும் சாதனையை நோக்கி நடை போடு

தடை போடு, தடை போடு
உன் தயக்கத்திற்கு நீ தடை போடு

துணிவோடு நீ காட்டி விடு
இந்தியனின் திறமையை உலகத்திற்கு நீ காட்டி விடு

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Pages