
ஆனால் மற்ற இந்திய மொழிகள் சமஸ்கிருதத்தை சார்ந்து இருப்பதால் எழுத்துக்கள் மிக அதிகம். தமிழில் இருப்பது போல் இலக்கியங்கள் சமஸ்கிருதத்தில் கூட கிடையாது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் சோழ சக்கிரவர்த்திகள் இங்குள்ள தமிழ் அந்தணர்கள் கோவில் திருப்பணிக்கு போதாமையால் வட நாட்டில் இருந்து வேறு அந்தணர்களை கொன்டு வந்தனர். இவர்கள் தமிழ் அந்தணர்கள் போல் அல்லாமல் சமஸ்கிருதத்தில் பாடல்கள் இயற்றி அதிலேயே பூஜைகளை செய்ய ஆரம்பித்து விட்டனர். அது வரை கோவிலகளில் தேவார, திருவாசக பதிகங்கள் பாடி வந்ததை நிறுத்தி விட்டு சமஸ்கிருத ஸ்லோகங்களை சொல்ல ஆரம்பித்தனர்.இதனால் தமிழில் பூஜை செய்வது நலிவடைந்தது.
இப்போதைய தமிழனுக்கு கொஞ்சம் கூட சுய மரியாதை இல்லை. கேராளாவில் போய் கூலி வேலை, வீடு வேலை, பிச்சை எடுப்பது என்று இருப்பதால் மலையாளிகள் தமிழர்களை
கேவலமாக பேசி ஏசுகிறார்கள். (மலையாள சினிமாக்களில் வரும் தமிழர்களை அசிங்கமாக திட்டுவார்கள், வாளை பளம், குளம்பு, கிளவன் என்று வேண்டுமென்றே சொல்வார்கள்
(தமிழனுக்கு 'ழ' உச்சரிக்க வராதாம்). பிச்சை எடுப்பவன் தமிழில் பேசுவான்,ஒரு மலையாளி 10 தமிழர்களை அடிப்பான், தெருவில் அசிங்கம் பண்ணுபவர்கள் தமிழர்களாக இருப்பார்கள்). ஒரு சினிமாவில் நடிகன் ஜெயராம் ஊட்டியில் தமிழர்களை எல்லாம் அடித்து துறத்தி "முல்லைபெரியார் தண்ணீர் குடிக்கும் பயல்களே, நாங்கள் தண்ணீரை நிறுத்தினால் செத்து போவீர்கள்" என்று திட்டுவான். இந்த ஜெயராம் கும்பகோணத்தில் இருந்து முன்னர் கேரளாவிற்கு குடி பெயர்ந்த பிராமண குடும்பத்தை சேர்ந்தவர்).
நன்றி ராஜா லோகநாதன் (கேரளா)
1 கருத்து:
மளையாளிகளின் நடத்தைதை அதிர்ச்சிகராமாக உள்ளது. பகர்வுக்கு மிக்க நன்றி.
கருத்துரையிடுக