
ஏட்டில் பெயர் பட்டியலை பார்க்கும்போதும் இன்ன பெயரைக்கொண்டவர் இன்ன மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதையும் சொல்லிவிடலாம். ஆனால் தமிழரை மாத்திரம் பெயரை வைத்து (பிற மொழி தாங்கியவர்)தமிழர் என்று இனம் காணமுடியாமல் உள்ளது.மற்றும் நேரில் பார்த்தவுடன் இவர் தமிழர் என்று தெரிந்தும் பெயரைக கேட்டால் பிற மொழி இனத்தவர் பெயரை தாங்கி இருப்பார்.இந்த குறைப்பாடு பிறமொழி இனத்தவரிடமில்லை.தன்னை மறந்தும் தமிழ் பெயர்களை யாரும் தங்களுக்குள் சூட்டிக்கொள்வதில்லை.ஒவ்வொரு மொழிக்குடும்பத்தினரும் தம்மொழி உணர்வுடன் தம் நிலைப்பாட்டில் பிடிப்புடன் இருக்கும்வேளை தமிழர்கள் மட்டும் தமிழ் மொழி இனவுணரற்ற நிலையிலேயே உள்ளனர்.
தமிழ் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு வைக்க பெற்றோர்கள் வைக்கவில்லை. அதனால், தமிழர்களிடையே தமிழ் பெயர்கள் குறைந்து வருகிறது. இப்படியே சென்று கொண்டிருந்தால், தமிழ் பெயர் ஒன்றை கூட நாம் கேட்க முடியாமல் போய்விடும். இந்த நிலைமை மாற வேண்டும்.தமிழ் மீது பற்று கொள்வோம். தமிழ் மீது காதல் கொள்வோம். தமிழ் எங்கள் உயிர் என்று எண்ணுவோம். தமிழ் பெயர்களை மீட்டெடுப்போம். தமிழர் பண்பாட்டை நிலைநாட்டுவோம். நம் குழந்தைகளுக்கு நல்ல பொருள் நிறைந்த தமிழ் பெயர்களை சூட்டுவோம்.
இங்கு ஒரு சிறிய காணொளி இணைத்து இருக்கிறேன். அதை தயவு செய்து பாருங்கள்
காணொளியை இங்கு காணலாம்.தூய தமிழில் பெயர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக