என்சைக்ளோபீடியாவின் புதிய பதிப்பு ஒன்று சுவாமியின் மடத்தில் இருந்தது. மொத்தம் இருபத்தைந்து பெரிய தொகுதிகள் கொண்டது அந்த நூல். அவர் அதைப் படிக்க ஆரம்பித்தார். அவருடைய மன ஒருமைப்பாடு அபாரமானது. வெகு விரைவிலேயே அவர் பத்து தொகுதிகளை முடித்துவிட்டு, பதினொன்றாவதை ஆரம்பித்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு சீடர் அந்த நூல் வரிசையைக் கண்டு, ‘ஒருவன் வாழ்நாள் முழுவதும் படித்தாலும் இத்தனை நூல்களையும் முடிக்க முடியாது’ என்று கூறினார்.
‘அது எப்படி? நான் ஏற்கனவே பத்து தொகுதிகளை முடித்துவிட்டேனே! என்ன கேள்வி வேண்டுமானாலும் அதிலிருந்து கேள்’ என்றார் சுவாமி.
சீடர் ஒவ்வொரு தொகுப்பிலிருந்தும் மிகக் கடினமான கேள்விகளைக் கேட்க சுவாமி அவற்றிற்குச் சரியாக விடையளித்தார். சிலவற்றில் அவர் நூலில் கொடுக்கப்பட்ட அதே சொற்களைக் கூறினார்.
‘இது மனிதத் திறமைக்கு அப்பாற்பட்ட செயல்’ என்றார் சீடர்.
‘இது மன ஒருமைப்பாட்டின் பலன். தூய வாழ்க்கை வாழும் ஒருவர் இத்தகைய மன ஒருமைப்பாட்டைப் பெற முடியும்’ என்றார் சுவாமி விவேகானந்தர்.
சனி, 24 டிசம்பர், 2011
சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் ஒரு அற்புதமான சம்பவம்
Tags
சுவாமி விவேகானந்தர்#
Vivekanandar#
Share This
About Thangabalu
Vivekanandar
லேபிள்கள்:
சுவாமி விவேகானந்தர்,
Vivekanandar
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக