
துணி காயப்போட கட்டியுள்ள கயிற்றில், தினமும் ஒரு குருவி இரவில் உட்கார்ந்து கொண்டே தூங்கும். எனக்கு ஒரு பத்து வயது ஆகும் வரை அதை நான் பார்த்து இருக்கிறேன். அதன் பிறகு, அது தன் இருப்பிடத்தை எங்கள் வீட்டின் மூலையில் ஓடாத ஒரு கடிகாரத்தின் மேல் அமைத்தது. அங்கு தான், அந்த குருவி தன் இனத்தைப் பெருக்கியது.
அந்த குருவியும், அதனுடைய மனைவியும் தங்களின் வாரிசான சின்ன குருவிக்கு பறக்க சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் இன்றைக்கும் என் மனதில் இருக்கிறது. சின்ன குருவிக்கு கொஞ்சம் உணவு ஊட்டி விட்டு, பெரிய குருவி பறந்து போய் மேலே நிற்கும், அங்கிருந்து கீச் கீச் என்று கத்தும். “வா பறந்து வா, உணவு தருகிறேன்” என்று தான் கூறியிருக்கும். அதற்கு சின்ன குருவியும் கீச் கீச் என்று கத்தும். ஒரு வேளை “எனக்கு பயமாக இருக்கு அம்மா. நீ இங்கே வந்து எனக்கு ஊட்டி விடேன்” என்று சொல்லிருக்குமோ.
அதன் பிறகு தாய் குருவி கொஞ்சம் கீழே இறங்கி வரும். அதன் பிறகு இந்த சின்ன குருவி பயந்து கொண்டே பறந்து போய் தாயின் அருகில் நிற்கும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். தன் வாரிசு பறக்கிறது என்ற ஆனந்தத்தில் தாயும், தன்னால் பறக்க முடிகிறது என்ற ஆனந்தத்தில் சின்ன குருவியும் பேசிக் கொள்ளும் காட்சிகள் அருமையாக இருக்கும்.
பின்னர் படிப்படியாக, அந்த குருவி நன்றாக பறக்க கற்றக் கொண்டது. அதன் பிறகு தனக்கு துணையை தேர்ந்தெடுத்து வேறு இடத்தில் வாழ்ந்தது. தினமும் காலை, எல்லாரும் எங்கள்
வீட்டில் ஆஜர் ஆவது தினமும் தவறாமல் நடக்கும்.
தினமும் அதற்கு அரிசி வைப்பதும், படித்துக் கொண்டே அவை உணவு உண்பதையும் நான் ரசித்துக் கொண்டு இருப்பேன். என்ன ஒரு இனிமையான வாழ்க்கை இந்த குருவிகளுக்கு என்று
அவ்வப்போது நான் நினைப்பதுண்டு.

ஆனால் சமீபகாலமாக குருவிகள் எங்கள் வீட்டிற்கு வருவதில்லை. அக்கம்பக்கத்திலும் குருவிகளைப் பார்க்க முடிவதில்லை. அவை எங்கே போனது?
60 கோடி மொபைல் போன்களுக்கு 5 லட்சம் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஏற்படும் மைக்ரோ வாய்ஸ் அதிர்வால் 30 சதவீத சிட்டுக்குருவிகள் அழிந்து விட்டனவாம். குருவி கூட்டை அழித்தால் பெரும் பாவம் வந்து சேரும் என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள். ஆனால் அறிவியல் முன்னேற்றம் என்ற பெயரில், நாம் அதன் இனத்தை ஒட்டு மொத்தமாக அழ்க்கிறோமே? அது பாவம் இல்லையா.
3g மைக்ரோ வாய்ஸ் அதிர்வால் குருவிகள் இனம் அழிந்து வருகிறது. வருங்காலத்தில் 4g, 5g, .. 10g என்று வரும் போது அதன் வலிமையான கதிர் வீச்சால், மனித இனத்திற்கும் ஆபத்து வருமே. அப்போது தான் அறிவியல் என்ற பெயரில் நமக்கு நாமே செய்து கொள்ளும் தீமைகள் பற்றி நமக்கு புரிய வருமோ??
எது எப்படியோ, 2012 உலகம் அழிந்து விடும் என்று ஒரு தரப்பு மக்கள் நம்புகிறார்கள். இப்படி குருவி போல் ஒவ்வொரு இனத்தை அழித்து விட்டு பெரும் பாவமூட்டைகளுடன் இறப்பதற்கு, நாம் எல்லாரும் ஒன்றாக இறந்து விடுவதே மேல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக