சிவகாமியின் சபதம் - பல வருடங்கள் கடும் தியானத்தினால் மனதையும், உடலையும் கட்டுப்படுத்தி வாழ்ந்து கொண்டிருந்த நாகதந்தி (புத்த பிஷு), பெண்ணாசையால்(சிவகாமி மேல்) இரு பெரிய ராஜாங்கத்திற்கு இடையில் போரை உண்டாக்கினான். தன் உடன் பிறந்த சகோதரன்(புலிகேசி) உயிர் விடவும் காரணமானான்.பொன்னியின் செல்வன் - நந்தினியின் மீது 65 வயது கிழவருக்கு ஏற்பட்ட பெண்ணாசையால் சோழ குலத்தில் என்னென்ன குழப்பங்கள். ”பெண்ணுக்கு நான் என்றும் மயங்க மாட்டேன்”, என்று கூறிக் கொண்டிருந்த பார்த்திபேந்திர பல்லவன், நந்தினியின் கண்களைப் பார்த்த ஒரு நொடியில் தலைகீழாய் மாறிவிட்டானே. அவளுக்கு அடிமையாகி விட்டானே. தன் உயிர் தோழன் ஆதித்த கரிகாலனுக்கும், சோழ குலத்திற்கும் துரோகம் செய்யவும் துணிந்து விட்டானே.
தங்கள் வீரத்தினால் பல போர்களில் வென்ற வீரர்களும், பெண்ணின் கண்களிடம் தோல்வி அடைந்து விடுகின்றார்கள். இது இயற்கையின் நீதியா, அல்லது ஆண்களின் பலவீனமா!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக