Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

வியாழன், 7 ஏப்ரல், 2011

நீங்கள் வாக்களிக்க வேண்டும்

”எந்த கட்சியும் சரியில்லை, எந்த தலைவனும் சரியில்லை. எல்லாம் கொள்ளைக்காரர்கள். நான் யாருக்கு வாக்கு அளிப்பது? அதனால் தான் நான் வாக்கு அளிப்பதில்லை”, என்று கல்லூரியில் படிப்பவர்கள், படித்து விட்டு நல்ல வேலையில் இருப்பவர்கள், நல்ல பொருளாதார நிலையில் உள்ள மக்கள் ஆகியோர் கூறுவதை நாம் கேட்கிறோம்.

“எனக்கு தனியார் கம்பெனியில் மாதா மாதம் நல்ல சம்பளம் வருகிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் எனக்கு ஒன்றும் பாதிப்பில்லை. அதனால் நான் தேர்தலில் வாக்கு அளிப்பதில்லை”,என்றும் பலர் கூறுகின்றனர்.

இந்த நாட்டில் மொத்தம் 121 கோடி மக்கள் இருக்கிறார்கள். அதில் 40 கோடி மக்கள் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் வாடுகிறார்கள். அவர்களும் இந்தியர்கள் தானே. நம் பொருளாதார நிலைமை நன்றாக இருக்கிறது என்பதற்காக நம் சொந்தங்களின் துயரங்களை நினைக்காமல் ஒரு சுயநல வாழ்க்கை வாழ்வது நியாயமா. அந்த கடவுள் நம்மை மன்னிப்பாரா?

1) ”சரி, நான் வாக்கு அளித்தால் இந்த 40 கோடி பேருக்கு உணவு கிடைத்து விடுமா?” என்பது தானே உங்கள் கேள்வி.

இன்று நம்மை போல் படித்தவர்கள் வாக்களிக்க வாக்குசாவடிக்கு செல்வதில்லை. இது அரசியல் கட்சிகளுக்கு ஒரு பெரிய பலமாக அமைந்து விடுகிறது. சோற்றுக்கு வழியில்லாமல் தவிக்கும் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் ”ஒரு நல்ல ஆட்சி அமையதா? நமக்கு எல்லாம் விடிவு காலம் வராதா?”, என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள். உணவு இல்லாமல் தவித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு 1000, 2000 என்று பணத்தை கொடுத்து விட்டு அவர்களின் வாக்குகளை விலைக்கு வாங்குகிறார்கள். உணவு இல்லாமல் ஒருவன் தவிக்கும் போது, யாரேனும் அவர்களுக்கு பணம் கொடுத்தால் அவன் மகிழ்ச்சியுடன் வாங்கி கொள்வான். அந்த பணத்தில் சில நாட்கள் உணவு கிடைக்கும் என்ற ஆசையில் தான். இந்தியர்கள் விசுவாசமானவார்கள். எனவே காசு கொடுத்த கட்சிக்கு அவர்கள் வாக்கும் அளித்து விடுகிறார்கள். கீழ் நடுத்தர மக்களுக்கு இலவசங்களை வாக்குறுதிகளாக கூறி அவர்களின் வாக்குகளையும் அரசியல் கட்சிகள் பெற்று விடுகிறார்கள்.

வாக்குகளை இப்படி எளிதாக விலைக்கு வாங்கி விட்டு, ஐந்து வருடம் எவரை பற்றியும் கவலைப்படாமல் தன் குடும்பங்களுக்கு சொத்து சேர்ப்பதையே குறிக்கோளாக கொண்டு ஆட்சி செய்கிறார்கள். எதற்காக அவர்கள் மக்களைப் பற்றி கவலைபட வேண்டும். தேர்தல் நேரத்தில் காசையும், இலவச வாக்குறுதிகளையும் கொடுத்தால் ஏழைகள் வாக்கு அளிக்கப் போகிறார்கள்.

உணவு இல்லாமல் தவிக்கும் ஏழைகள் காசு வாங்குவதை குற்றம் என்று நாம் சொல்ல முடியுமா. அவனின் பசி அவன் தானே அறிவான். நம்மை போன்றவர்களுக்கு பசி என்றால் என்ன என்று தெரியுமா? அந்த மக்களை குறை சொல்ல முடியாது. பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகளையும் குறை சொல்ல முடியாது. அரசியல்வாதிகளை இப்படி மாற்றியது யார்? வேறு யார். நாம் தான். நாம் எல்லாரும் வாக்கு அளிக்க சென்றால் இப்படி நடக்குமா. காசு கொடுத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று அரசியால்வாதிகள் இப்படி நினைப்பார்களா?

நம்மை போன்று படித்தவர்கள் அரசின் நிர்வாகத்தை ஆராய்ந்து எந்த கட்சிக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்து வாக்களிக்க தொடங்கினால் மிக விரைவில் 50 விழுக்காடு ஒட்டுபதிவு 80, 90 விழுக்காடு ஆகும். அரசியல்வாதிகள் சிந்திக்க தொடங்குவார்கள். வெறும் காசை மட்டும் கொடுத்து ஆட்சிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து நல்ல திட்டங்களை திட்டி மக்களுக்கு நல்லது செய்ய தொடங்குவார்கள். அந்த 40 கோடி மக்களின் வாழ்வு மேன்படும் .

2) ”40 கோடி மக்கள் கஷ்டப்படலாம். ஆனால் நான் நன்றாக இருக்கிறேன். அது எனக்கு போதும்”, என்று நினைப்பவர்களா நீங்கள்?

நம் தேசத்தின் வளம் எல்லாம் நம் அரசியல்வாதிகளின் கருப்பு பணமாக மாறி வெளிநாட்டு வங்கிகளுக்கு சென்று கொண்டு இருக்கிறது. அந்த வங்கிகளில் பணத்தைப் போடும் அரசியல்வாதிகள், சில நேரங்களில் அந்த விவரங்களைத் தன் குடும்பத்திற்கு கூட சொல்வதில்லை. அவர்கள் திடிரென்று இறக்க நேர்ந்தால், அந்த பணம் அந்த வங்கிகளுக்கே சொந்தமாகிறது. அது திரும்ப இந்தியாவிற்கு வரவே முடியாது. இதுபோல், நம் செல்வம் நம் நாட்டை விட்டு சென்று கொண்டே இருக்கும். இன்று நகர மக்கள் பணக்காரர்களாக இருக்கிறார்கள். கிராமத்து மக்கள் வறுமையில் இருக்கிறார்கள். இன்னும் 60, 70 ஆண்டுகள் கழித்து, நகர மக்களும் வறுமையில் இருப்பார்கள். எப்படி?

அரசாங்க கஜானாவில் பணம் குறைந்து கொண்டே வருவதால், அடிப்படை வசதிகளை செய்வதற்கு கூட இயலாத நிலை ஏற்படும். அதனால் சாலை ரோடுகளை சீரமைக்க பணம் இருக்காது. மின்சாரம் இல்லாமல் இருளில் முழ்குவோம். போதிய வசதிகள் இங்கு இல்லாததால் மென்பொருள் அலுவலகங்கள், வெளிநாட்டு கம்பெனிகள் மற்றும் நம் நாட்டு கம்பெனிகள் நம் ஊரை விட்டு போகும். நகர மக்கள் வேலையை இழப்பார்கள். அவர்களில் ஒரு 5 சதிவிகித மக்கள் வெளிநாடுகளில் வேலைக்கு போகலாம். மீதமுள்ளவர்கள் இன்று கிராமத்து மக்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படி தான் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும், அரசியல்வாதிகள் ஏதாவது பணம் தரமாட்டார்களா என்று ஏங்கும் கூட்டத்தில் நகர மக்கள் என்று மார் தட்டிக் கொள்ளும் நாமும் இணைவோம். ஒரு காலத்திற்கு பிறகு அரசியல்வாதிகள் கொள்ளையடிக்க நம் நாட்டில் ஒன்றுமே இருக்காது. அரசியல்வாதிகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து விடுவார்கள். சோனியாவின் வாரிசுகள் இத்தாலிக்கு சென்று விடும்.

நாம் இங்கு அரசாங்கம் இல்லாமல், பாதுகாப்புக்கு ராணுவம் இல்லாமல் அனாதைகளாக இருப்போம். ஏதாவது ஒரு நாடு நம் நாட்டைக் கைப்பற்றும். மீண்டும் நாம் அடிமைகளாக ஆவோம். எல்லாவற்றையும் இழந்தால் தான் மனிதனுக்கு தைரியம், ரோஷம் வருமாம். எல்லாவற்றையும் இழந்து பிற நாட்டவன் கையில் அடிமையாய் ஆகும் போது நமக்கு உணர்ச்சி வரும். கோபம் வரும். ரோஷம் வரும். விடுதலைக்கு போராடுவோம். தன்னலமற்ற வீரர்கள் விடுதலைக்காக போராடுவர்கள்.

இப்போதே ரோசம் வந்தால் இந்த எல்லாவற்றையும் தவிர்க்கலாமே. நம் வாரிசுகள் வறுமையில் வாடுவதை தவிர்க்கலாமே. முதலில் நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்று தான். வரும் தேர்தலில் மறக்காமல் வாக்களிக்க வேண்டும்.படித்தவர்களே, நல்ல நிலையில் உள்ளவர்களே, நம் நாட்டைக் காக்க, நம் வாரிசுகளைக் காக்க உங்கள் பொன்னான வாக்குகளை பதிவு செய்ய வாருங்கள். வாக்களிப்போம். நம் நாட்டைக் காப்பாற்றுவோம்.
- தங்கபாலு

2 கருத்துகள்:

வலிப்போக்கன் சொன்னது…

வாக்களித்தால் மட்டும் வறுமை நீங்கி
விடுமா?

Thangabalu சொன்னது…

இக்கட்டுறையை முழுமையாக பார்த்தால் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்...

Post Top Ad

Your Ad Spot

Pages