தொண்டன் - தலைவா, அந்த அம்மா ஊர் ஊரா மேடை போட்டு 2ஜி ஊழல் பற்றி மக்களிடம் விளக்கி நம்மை நாறடிக்கறாங்க. ஒரு பக்கம் அழகிரி வேறு, மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக மிரட்டி கொண்டு இருக்கிறார். இன்னொரு பக்கம் சுப்பரமணியசாமி அம்மாவுக்கு பலமாக 2ஜியை பற்றி மேடைகளில் வெளுத்து வாங்குகிறார். திமுக செல்வாக்கை இழந்து கொண்டே வருகிறது. வரும் தேர்தலில் நாம் எப்படி தலைவா ஜெயிக்க போறாம்.
கலைஞர் - ஹா ஹா ஹா(சிரிப்பு). தம்பி, கடந்த சட்டசபை தேர்தலில்(2006) கூட தான் அதிமுகவின் கை உயர்ந்து இருந்தது.அரிசி, டிவி தரேன் என்று சொன்ன ஒரு வார்த்தை தான் நமக்கு வெற்றியை கொடுத்தது. அது மாதிரி இந்த தடவை என்ன கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கின்றேன்.
தொண்டன் - நீங்க சொல்றது சரி தான் தலைவா. நீங்கள் ஒரு அரசியல் சாணக்கியன். போன தடவை டிவி கொடுத்தீங்க. இந்த தடவை இலவச கேபிள் டிவி இணைப்பு தரேன் என்று சொல்லுங்க தலைவா. நம்ம கலைஞர் டிவியை நிறைய பேர பார்க்கவும் அது ஒரு வாய்ப்பாக இருக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.வெற்றி நமக்கு தான் தலைவா!!!
வியாழன், 6 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக