உனக்கு என்ன திறமை இருக்கு
நீ ஆராய்ச்சி செய்யனும்
நானும் ஆராய்ந்தேன்
கண்டு கொண்டேன் பல திறமையை
கதைகள் எழுதினேன்
பாடல் வரிகள் எழுதினேன்
இசை அமைத்தேன்
பாடவும் செய்தேன்
என் குரலில் இனிமையில்லை
இனிமையான குரலை தேடி அலைகிறேன்
பல பேரை கெஞ்சினேன்
சம்மதம் வரவில்லை
என் வரிகளை பாடலாக்குவது
என் இலட்சியம்
அது வரை ஓயாது
என் தேடலும்
தேடி தேடி கிடைப்பது
என்றும் சுவையானது
அதுவே நிலையானது
தேடலை ரசித்து
நான் அதை செய்கிறேன்
கடவுள் அருளுடன்
தேடல் நிச்சயம் வெற்றி பெறும்
புதன், 5 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக