உழைத்து உழைத்து கலைத்து
உழைக்க வேண்டாம் என்ற உடல் கூற
உழைக்காத பலர் சொகுசாய் இருக்க
உழைக்கும் தனக்கு என்ன கிடைத்தது
என்று மனம் வருந்த
உடலும் உயிரும் வருந்தும் அளவிற்கு
உழைத்தும் பலனில்லையே
இனிமேல் நான் ஏன் உழைக்க வேண்டும்
என்று எண்ணம் வர
உள்ளே உறங்கியிருந்த
மிருகம் வலிமை பெற
போற்றப்பட வேண்டிய கடவுள்
உன்னிடம் சாபம் பெற
போக கூடாத வழியில் நீ போக
சேர கூடாத நபர்களிடம் நீ சேர
செய்ய கூடாத காரியங்களை நீ செய்ய
உழைத்த உழைப்பு எல்லாம்
வீணாக போக
மாயை உலகில்
வலுவாக சிக்கிக் கொண்டு
சீரழிய உனக்கு விருப்பமா??
உழை உழை உழை
அதில் என்றும் இல்லை பிழை
உழைத்து வெற்றி பெறுவதில்
வரலாம் தாமதம்
எனினும் அவ்வெற்றியே நிரந்திரம்
சனி, 18 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக