தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜெல்லிக்கட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது என்பது நாம் அறிந்த விஷயமே.
சித்திரவதையில் இருந்து காளைகள் தப்பியது, இனி ஜெல்லிக்கட்டில் மனிதர்கள் உயிரிழப்பு இருக்காது, பல குடும்பங்கள் பாதிப்பில் இருந்து தப்பிக்கும் என்று நான் மகிழ்ச்சி அடைந்தது நினைவு இருக்கிறது. விலங்குகள் பாதுகாப்பு ஆணையம், மத்திய அரசாங்கம், உச்ச நீதி மன்றம் மற்றும் நம் ஊடகங்கள் இந்த காரணத்தை தான் நடுநிலையாளர்களின் மனதில் ஆழமாய் பதித்தியது.
சமீபத்தில் "தனி ஒருவன்" என்ற ஒரு படம் பார்த்திருப்பீர்கள்.
நடக்கும் எந்த ஒரு சம்பத்திற்கு பின்னாலும் நமக்கு தெரியாத ஒரு காரணம் இருக்கிறது என்பதை விளக்கி இருப்பார்கள். பல பேர் பல தடவை கூறினால் பொய் கூட எப்படி உண்மை ஆகிறது என்பது நமக்கு புரியும்.
நம் மக்களின் கனவு தேசமான அமெரிக்க ஒவ்வொரு நாட்டின் மீது போர் தொடுக்கும் போதும், உண்மையான சுயநல காரணங்களை மறைத்து , தவறான காரணங்களை உலகம் முழுவதும் இருக்கும் மனிதர்களின் மனதில் எவ்வாறு பதிய வைக்கிறது என்பதை எண்ணற்ற youtube காணொளிகள் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.
ஜெல்லிக்கட்டு தடை - உண்மையான காரணம் என்ன?
தமிழ்நாட்டில் இருக்கும் ஜெல்லிக்கட்டு காளைகளின் வேலைகள் இரண்டு தான்.
1) இனவிருத்தி
2) ஜெல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் மற்றும் இதர போட்டியில் கலந்து கொள்வது
ஜெல்லிக்கட்டு உரிமையாளர்களுக்கு காளையை இனவிருத்திக்கு அனுப்புவதில் எந்த வருமானமும் இல்லை. அவர்கள் காளைகளை பாரமரிக்க ஒரே காரணம் ஜெல்லிக்கட்டு தான். அந்த போட்டி அழிந்தால், காளைகள் அழியும். நம் ஊர் காளைகள் அழிந்தால், வெளிநாட்டு நிறுவனங்கள் அவர்களின் காளைகளை இனவிருத்திக்கு பயன்படுத்த சொல்வார்கள். அந்த மாடுகளுக்கு தரவேண்டிய உணவை தங்களிடமே வாங்க வைப்பார்கள். அந்த மாடுகளை பராமரிக்க இயலாமல் மாட்டு பண்ணையாளர்கள் தவிப்பார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் அந்த வசதியை செய்து தருவதாக கூறி, கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை ஏழைகள் ஆகி , அவர்களின் பண்ணைகளை தங்களுக்கு சொந்தம் ஆக்குவார்கள். அதன் முலம் அவர்கள் பால் வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார்கள்.
சரி, இது மாட்டு பண்ணையாளர்கள் பிரச்சனை. நமக்கு என்ன கெடுதல்? வெளிநாட்டு மாடுகளின் மூலம் நமக்கு சத்தான பால் கிடைக்கும் என்று நாம் மகிழ்ச்சி அடைய போகிறோமா?
இந்த வெளிநாட்டு மாடுகளின் மூலம் பெறப்படும் பால், ஆரோக்கியமானது அல்ல என்றும் சர்க்கரை நோயை எளிதல் வர வைக்கும் என்கிறார்கள் உண்மையை பேசும் மருத்தவர்கள். ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்து விட்டால், காலம் முழுக்க அவர் மாத்திரை சாப்பிட வேண்டும் என்பது நாம் அறிந்த உண்மை. அதன் மூலம் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பெரும் பணம் சம்பாதிக்கும்.
யாருக்கும் விலை போகாத சமூக ஆர்வலர்கள், ஜெல்லிக்கட்டில் விதிகள் சரியாக பின்பற்றபடுகிறது என்றும் மாடுகள் துன்புறுத்தபடுவதில்லை என்றும் கூறுகிறார்கள்.
மாடுகளை துன்புறுத்துகிறார்கள் என்று காரணம் சொல்லி ஜெல்லிகட்டுக்கு விலங்குகள் பாதுகாப்பு ஆணையம் தடை போடுகிறது. பல வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்யபடுகிறது. கொன்றால் தப்பிலை, துன்புறுத்தினால் தவறு என்று செயல்படும் இந்த அமைப்புகள், வெளிநாட்டு நிறுவங்களுக்கு விலை போன கை கூலிகள்.
எல்லா விளையாட்டிலும் விபத்து என்பது ஏற்படுவது உண்டு. விபத்துகளை தடுப்பதற்கு விதிகளை மாற்றி, பாதுகாப்பான விளையாட்டாக மாற்ற முற்படுவதே இதற்கு தீர்வு.
நாம் இந்த விவகாரத்தில் விழித்து கொள்ளவில்லை என்றால் நம் பாரம்பரிய விளையாட்டு அழிந்து போகும், ஜல்லிகட்டு காளை இனமே அழிந்து போகும், மாட்டு பண்ணையாளர்கள் ஏழ்மையில் முழுகுவார்கள், நம் தலைமுறையினர் குடிக்கும் பால் ஆரோக்கியமனதாக இருக்காது.
2 கருத்துகள்:
For what purpose other than breeding do farmers raise rams (male goat), same reason farmers should raise bulls. Jallikattu is just a sport not fit for modern times.
ஆட்டை பாராமரிக்கும் செலவும், மாட்டை பாராமரிக்கும் ஒன்று இல்லையே.
கிரிகெட்டு போட்டியில் காலத்திற்கு ஏற்றார் போல் ஒரு நாள் போட்டி மற்றும் ட்வென்டி ட்வென்டி போட்டிகள் உருவாக்கப்பட்டது. அதே போல் ஜெல்லிகட்டை தடை செய்யாமல் , மாற்றம் செய்திருக்கலாமே.
கருத்துரையிடுக