புரட்சித்தளபதி விஷால் படம் பண்ண சொல்லிருக்காரு. அசிஸ்டண்ட் டைரக்டர்ஸ் இங்க வாங்கப்பா.
கமர்சியலா, சம மாஸா படம் இருக்கணும்னு சொல்லிருக்காரு. ஆனா இப்ப, என் கிட்டே கதை ஒன்னும் இல்ல. உங்களுக்கே தெரியும், நான் கோர்ட் கேஸ்னு அலைச்சலில் இருக்கேன். ஆனால் விஷால் வாய்ப்பை வீணடிக்க விரும்பவில்லை. உங்களை நம்பி தான் ஒகே சொன்னேன். திரைக்கதையை இரண்டு நாட்களுக்குள் தயார் செய்து விஷாலிடம் சொல்ல வேண்டும்.cகமர்சியலா இருக்கணும். தரணி படம் மாதிரி ஸ்கிரின்பிளே படு வேகமா போகனும்னு விஷால் சொல்லிருக்காரு.
அதனால், தில், தூள் டிவிடி எடுங்க.
”விஜய் இல்லாமா மாஸா”. இருக்கவே முடியாது. திருப்பாச்சி, வேட்டைக்காரன் எடுங்க.
முதலில் திருப்பாச்சி.
தங்கச்சி செண்டிமண்ட் என்றைக்கும் ஓர்க் அவுட் ஆகும். கிளைமாக்ஸ் ரெடி. வில்லனைக் கொல்றாரு. தங்கச்சியைப் பார்த்து கண் கலங்கறாரு. தங்கச்சி அழறாங்க. அப்படியே வணக்கம் போடறோம்.
தில் எடு.
இந்த மாதிரி வில்லனிடம் ஒவ்வொரு தடவை போன்ல பேசும் போதும் லூசு, பரதேசி என்று கூப்பிடறது நல்லா இருக்கு. நோட் பண்ணுங்க.
தூள் எடு.
சூப்பர் வில்லன். இவரை தான் நம்ம படத்துக்கு வில்லனா போடணும். விவேக் கலக்கிட்டாருப்பா. நம்ம படத்துல விவேக் வைச்சுக்கலாம். இதே மாதிரி, விவேக் ஹீரோயினைக் கரக்ட் பண்ண செய்ற முயற்சிகளைக் காமெடி சின்ஸ் ஆகிடலாம். அந்த போட்டோவில் இருக்கும் விவேக் போல், நாம் விவேக்கை சிக்ஸ் பேக்ல் காட்டலாம்.
வேட்டைக்காரன் எடு.
#வேதநாயகம் நா பயம்#
இந்த பயம் என்ற வார்த்தையை மையமா வைச்சு வில்லன் சீன்ஸ் டெவலப் பண்ணுங்க.
இந்த நாலு படத்துலயும் ஹிரோ, வில்லனுடன் போனில் தான் பேசுகிறான். சவால் விடுகிறான். அனல் பறக்கும் வசனங்கள் பேசுகிறான். எனவே நாமும் இது போல் வைச்சுக்கலாம்.
அப்புறம் என் favourite pokkiri. இண்டர்வெல்க்கு பிறகு ஹிரோ போலீஸ் என்று கூறுவோம். suspense ha irukum.
இவ்வளவு தான். எனக்கு நாளைக்குள் முழு திரைக்கதை ரெடி பண்ணி கொடுங்க. நான் விஷால் கிட்டே சொல்லனும்.
புதன், 5 அக்டோபர், 2011
Home
Unlabelled
வெடி படத்தின் திரைக்கதை இப்படி தான் உருவாகிருக்குமோ?
வெடி படத்தின் திரைக்கதை இப்படி தான் உருவாகிருக்குமோ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக