ஆட்டம் எதற்கு
இருப்பது வெறும் ஓடு தானே
மூச்சு நின்னால் ஆடுமா ஓடு?
வாழ்க்கை மிகவும் சிறியது
அதில் நீ பெரிய சாதனை செய்
பல பேருக்கு துன்பம் செய்யாதே
நீ பெரியவனா அவன் பெரியவனா
என்ற பொறாமை தேவைதானா
பெரியவன் ஒருவனே
அவன் தான் ஆண்டவன்
எவன் ஆண்டால் என்ன
என்று உட்கார்ந்து இருப்பது நியாயம் தானா
அரசனின் தவறை தட்டிக் கேட்க வேண்டாமா?
உன் வாழ்விற்கு ஒரு அர்த்தம் வை
உண்மையான இன்பத்தை நீ தேடு
இவ்வளவு வேலை உண்டு
தேவையில்லாத ஆட்டம் தான் எதற்கு?
ஆளை கொல்லும் ஆணவத்தை நீ விலக்கு
விண்ணை தொடும் நாள் அருகில் தான் இருக்கு
ஆட்டம் எதற்கு
இருப்பது வெறும் ஓடு தானே
மூச்சு நின்னால் ஆடுமா ஓடு?
செவ்வாய், 23 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக